ராசி குணநலன்கள்(Zodiac Sign Characteristics):
ஒரு நபரின் ராசி என்பது, அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் சந்திரன் இருக்கும் வீட்டைக் குறிப்பதாகும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான சில குணநலன்கள் மற்றும் அடிப்படை பண்புகள் உள்ளன. ராசியை ஆளும் கிரகத்தைப் பொறுத்து இந்த தன்மைகள் மாறும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகப்பெயர்ச்சி உட்பட பல்வேறு ஜோதிடப் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் ராசியின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அது மட்டுமின்றி, ராசிகளை நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று என்ற பஞ்சபூதங்களின் அடிப்படையிலும் பிரித்துள்ளனர்.12 ராசியினருக்கும் இருக்கும் தனிப்பட்ட குணநலன்களை இங்கே பார்க்கலாம்.
Free Today's Rasipalan/Dinapalan (தின பலன்) in Tamil
மேஷ ராசிக்காரர்களின் குணநலன்கள் (Mesha Rasi Characteristics):
மேஷ ராசி(Aries) 12 ராசிக்கட்டத்தில் முதல் ராசியைக் குறிக்கிறது. மேஷம் நெருப்பு ராசியாகும். மேஷ ராசியில் பிறந்த நபர்கள், நேர்மையானவர்கள், தைரியமானவர்கள், மிகவும் தன்னிச்சையாக செயல்படுவார்கள். வெளிப்படையாகப் பேசும் பழக்கம் கொண்டவர்கள். செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள். அதிக ஆற்றலும், விரைவாக காரியத்தை செய்யும் திறனும் கொண்டவர்கள். சூரியன் உச்சம் மற்றும் செவ்வாய் ஆட்சி பலம் பெறும் ராசி என்பதால் முன்கோபம் கொண்டவர்கள் மற்றும் எதிலும் அவசரப் படுபவர்கள். பொறுமை என்பதே இல்லை. நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், பழமை விரும்பிகள்.
ரிஷப ராசிக்காரர்களின் குணநலன்கள் (Rishabha Rasi Characteristics):
ரிஷப ராசி(Taurus) நிலராசியாகும். ரிஷபத்தில் சுக்ரன் ஆட்சி கிரகமாக இருப்பதால், அழகான தோற்றமும், இனிமையான சுபாவமும் கொண்டவர்கள். சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதால், உணர்ச்சி பூர்வமாகவும், தெளிவான சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். படைப்பாளிகள், கலைத்துறையில் மிளிர்பவர்கள். உணவுப் பிரியர்கள், சோம்பேறி, அதே நேரத்தில் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அடிக்கடி ஏற்படும் மாற்றத்தை விரும்பாவதர்கள். எளிதில் கோபப்படுத்தலாம், முடிந்த வரை பொறுமை காப்பார்கள், பொறுமை எல்லை மீறும்போது விளைவுகள் விபரீதமாகும். எதையும் எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவர்கள். சண்டையில் இவர்களை வீழ்த்துவது கடினம்.
மிதுன ராசிக்காரர்களின் குணநலன்கள் (Midhuna Rasi Characteristics):
புதன் ஆட்சி செய்யும் காற்று ராசியான மிதுன(Gemini) ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதையும் விரைவில் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளைப் போன்ற ஆர்வத்தைக் கொண்டவர்கள், எப்போதும் கேள்விகளைக் கேட்டு பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். மிதுன ராசிக்காரர்கள் யாரைச் சந்தித்தாலும், சில நொடிகளில் ஒருவரின் குணாதிசயத்தை அளவிடும் அசாத்தியமான திறனைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இரட்டை முகம் கொண்டவர்கள். இவர்களிடம் ரகசியங்கள் சொல்லக்கூடாது. பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கும். எனவே, தனிமையை விரும்ப மாட்டார்கள்.
கடக ராசிக்காரர்களின் குணநலன்கள் (Kataka Rasi Characteristics in Tamil):
கடக ராசி (Cancer) நீர் ராசி. இந்த ராசியில் சந்திரன் ஆட்சி செய்கிறது மற்றும் குரு உச்சம் பெறுகிறது. 12 ராசிகளில் மிகவும் உணர்ச்சி பூர்வமான ராசி என்றால் கடம் தான். கடக ராசியினர் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள், அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்கள். மென்மையான இயல்பு, இரக்கம், ஆறுதல், பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தும் ராசியினர். அம்மா மற்றும் குடும்பம் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். கடக ராசிக்காரர்கள் மரியாதையும், சாந்தமும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். பேச்சில் உறுதி இருந்தாலும், எப்பொழுதும் மென்மையாகவும் சாந்தமாகவும் பேசுவார்கள்.
சிம்ம ராசிக்காரர்களின் குணநலன்கள் (Simha Rasi Characteristics in Tamil):
சூரியன் ஆட்சி செய்யும் நெருப்பின் அடையாளமான சிம்ம(Leo)ராசிக்காரர்கள் இயற்கையான தலைவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், தைரியமானவர்கள், அவர்கள் நினைத்த அனைத்தையும் வெல்லும் ஆர்வமுள்ளவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டால், அவர்கள் அதை விடாமுயற்சியுடன் செய்து விடுவார்கள். அவர்கள் வீடு, வேலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் பொறுப்பாக இருப்பதோடு, வாழ்க்கையை முழுமையாக நேசிக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் குறுகிய மனப்பான்மை மற்றும் குறை கூறும் குணம் கொண்டவர்களை வெறுக்கிறார்கள். சில சமயங்களில் வளைந்து கொடுக்காதவர்களாகவும் இருக்கலாம்.
கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் (Kanni Rasi Characteristics):
நில ராசியான கன்னி(Virgo) ராசியில் புதன் உச்சம் பெறும். வெளித்தோற்றத்தில், கன்னி ராசிக்காரர்கள் பணிவானவர்கள், சுயமாக செயல்படுபவர்கள், உழைப்பாளிகள் மற்றும் நடைமுறையானவர்கள். கன்னி ராசியினர் விரைவான சிந்தனையாளர்கள், இருப்பினும் அவர்கள் அதிகமான மன ஆற்றலைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், சுயநலமாகத் தோன்றுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் சிறந்த பேச்சுவார்த்தையாளர்கள், தங்கள் கூர்மையான புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி விவாதங்களை முன்வைப்பார்கள். மக்களின் இதயங்களையும் மனதையும் வெல்வார்கள். மேலும் இவர்கள் கலை, நடனம் மற்றும் எழுத்து மூலம் தங்களை வெளிப்படுத்துவார்கள்.
துலாம் ராசிக்காரர்களின் குணநலன்கள் (Thulam Rasi Characteristics):
துலாம்(Libra) ராசிக்காரர்கள் வெளிப்படையான நபர்கள், வசதியாக இருப்பார்கள். சுக்ரனின் ஆட்சி பலம் மற்றும் சனி உச்சம் ஆகும் காற்று ராசி. உலகில் சமநிலை, நல்லிணக்கம், அமைதி மற்றும் நீதியை அடைவதில் பெரும்பாலும் அக்கறை கொண்டுள்ளனர். வசீகரம், புத்திசாலித்தனம், வெளிப்படைத்தன்மை, மற்றும் தடையற்ற இணைப்பு ஆகியவற்றின் கலவையாக இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் மிகவும் இணக்கமான மற்றும் நேர்மையான மனிதர்கள், அவர்கள் சமூக தொடர்புகளின் முக்கியத்துவத்தை விரும்புகிறார்கள். அன்பானவர்களாக இருந்தாலும், தன்னுடைய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்கள் (Vrishchik Rashi Characteristics):
விருச்சிக(Scorpio) ராசியினர் மர்மமானவர்கள். செவ்வாய் ஆட்சி ஆகும் ராசியில் சந்திரம் நீச்சம் அடைந்து பலம் இழக்கிறது. விருச்சிக ராசியினர் ஆழ்ந்த சிந்தனையாளர்கள், இரகசியமானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து எப்போதும் இருக்கிறார்கள். விருச்சிக ராசியின் அடையாளத்தை குறிக்கும் கொடிய தேளுடன் இவர்களின் குணங்கள் பொருந்துகிறது. மிகப்பெரிய தடைகளை கடக்கும் திறன் கொண்ட உந்துதல் பெற்றவர்களாகவும், தொழில்முனைவோராகவும் இருக்க முடியும். தங்கள் தனிப்பட்ட உறவுகள் மீது பொசசிவ்வாக இருப்பார்கள் மற்றும் நட்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தனுசு ராசிகாரர்களின் குணநலன்கள் (Dhanu Rashi Characteristics in Tamil):
குரு ஆட்சி பெறும் தனுசு (Sagittarius) ராசியானது வில் மற்றும் அம்புகளை ஏந்தியிருக்கும் நெருப்பு ராசியாகும். தனுசு ராசிக்காரர்கள் உடலும் அல்லது மூளையும் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. இவர்கள் இரட்டை இயல்பு கொண்டவர்கள், ஞானத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் இராசி சின்னத்தைப் போலவே, தனுசு ராசிக்காரர்களும் மாறும் இயல்புகளைக் கொண்டுள்ளனர். தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக வெளிப்படையாக பேசும் தன்மைக் கொண்டவர்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் விசுவாசமாணவர்கள், புத்திசாலி, உறுதியான, இரக்க குணம் கொண்டவர்கள்! தனுசு ராசியின் முக்கியமான பண்புகளில் ஒன்று சுதந்திரம்.
மகர ராசிக்காரர்களின் குணநலன்கள் (Makar Rashi Characteristics):
சனி ஆட்சி பெறும், செவ்வாய் உச்சம் பெறும் நில ராசி மகர (Capricorn) ராசியாகும். இரண்டு வெவ்வேறு பண்புகளைக் கொண்ட கிரகத்தின் இரட்டை குணங்களை வெளிப்படுத்துவார்கள். சோம்பேறி, அதே நேரத்தில் ஆற்றலும் தைரியமும் கொண்டவர்கள். அன்பாக பாசமாக இருப்பார்கள், பாதுகாப்பாளர்கள், லட்சியவாதிகள், கடின உழைப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவை இவர்களுக்கானவை. மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதீத ஆர்வமுள்ளவர்கள் மற்றும் உயர்ந்த, அடையக்கூடிய இலக்குகளை அமைக்கும் திறன் கொண்டவர்கள். அனால், தங்கள் சவால்களை எதிர்கொள்வதற்கும் செயல்படுவதற்கும் அடிக்கடி உந்துதல் இல்லாதவர்கள்.
கும்ப ராசிக்காரர்களின் குணநலன்கள் (Kumbha Rashi Characteristics):
சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசி(Aquarius), நீர் ராசியாகும். 12 ராசிகளிலேயே மிகவும் வித்தியாசமான ராசி கும்ப ராசி. கும்ப ராசிக்காரர்கள் தனித்துவமானவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள், புத்திசாலிகள், மற்றும் விதிவிலக்கானவர்கள். காற்றைப் போலவே கும்ப ராசிக்காரர்களும் ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் போது, கும்ப ராசிக்காரர்கள் அமைதியாகவும் உணர்திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு, நேர்மறை எண்ணங்கள் அவர்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். அது இல்லாவிட்டால் அவர்கள் விரைவாக சலிப்படைந்து எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்களின் குணநலன்கள் (Meena rashi Characteristics):
ராசி சக்கரத்தில் 12 வது ராசியான மீனம்(Pisces) குருவின் ஆட்சி ராசி மற்றும் சுக்ரனின் உச்ச வீடாகும்.
மீனம் ராசியினர் அற்புதமான படைப்புத் திறன் கொண்டவர்கள், கனவு காண்பவர்கள் மற்றும் கவிஞர்கள். உலகில் அர்த்தமுள்ள மற்றும் முக்கியமானவற்றை செய்ய விரும்புவதற்கும், எதிரெதிர் திசைகளில் நீந்திய இரண்டு மீன்களால் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, அவர்களின் விருப்பமும், நடைமுறையும் உலகத்தின் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதற்கும் இடையில் பெரும்பாலும் சிக்கியிருப்பார்கள். உணர்வுபூர்வமானவர்கள், ரசனை கொண்டவர்கள் அதே நேரத்தில் ஆன்மீகத்திலும் பற்று உடையவர்கள். எல்லாம் சரியாக நடந்தாலும், எதிர்பார்த்த ஒரு வேலை மட்டும் தாங்கள் விரும்பியபடி நடக்கவில்லை என்றால், மீன ராசிக்காரர்கள் உடனடியாக மனம் சோர்வாகி விடுவார்கள்.